தொலைக்காட்சி

donderdag 15 november 2012

23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தார் சச்சின்

23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தார் சச்சின்
[ வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012, 10:55.27 மு.ப GMT ]
உலகின் தலைசிறந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். 1989ம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி பாகிஸ்தானுக்கெதிரான கராச்சி டெஸ்டில் அறிமுகம் ஆனார் மாஸ்டர் பேட்ஸ்பேன்.
16 வயது மற்றும் 223 நாட்களில் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆன அவர் தனது முதல் ஆட்டத்தில் 15 ஓட்டங்கள் எடுத்தார். 39 வயதான அவர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட டெண்டுல்கர் 190 டெஸ்ட்டில் 15,533 ஓட்டங்களும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் 100 சதம் (டெஸ்ட் 51 + ஒருநாள் போட்டி 49) அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஆவார்.
23 ஆண்டு காலம் சிறப்பான ஆட்டம் மூலம் அவர் கோடிகணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
கிரிக்கெட்டின் சகாப்தமான அவர் இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். கிரிக்கெட்டில் அவரது அசாதாரண சேவையை பாராட்டும் விதமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி மேல்-சபை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டார்.
மேலும், அவுஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா விருதையும் சமீபத்தில் பெற்றுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten