உலகம் முழுவதும் காபிக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் நன்மை தீமைகள் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் பெரும்பாலானவை காபியால் பாதிப்பு அதிகம் என்றே கூறுகின்றன.
காபியில் உள்ள கபைன் என்ற நச்சு உடலுக்கு தீமை அளிக்கும் என்று தெரிந்தும் காபி அருந்துவதை கைவிட யாரும் முன்வருவதில்லை.
இந்நிலையில் மக்களின் மனநிலையை நன்கு அறிந்த உணவுகள் குறித்த ஆய்வு நிறுவனம் ஒன்று காபி குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொண்டது.
இதில் கபைன் இல்லாத ஆனால் காபியின் சுவை, நறுமணம் மாறாத மாற்று பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. பிஸ்டாசியோ என்ற தாவர கொட்டையில் இருந்து காபி கொட்டை தயாரிக்கும் அதே முறையில் தயாரிக்கப்பட்ட தூளை கொண்டு காபி தயாரிக்கலாம்.
இது உடலுக்கு எந்த பக்க விளைவுகளும் பாதகமும் இல்லாதது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக காபி கொட்டையில் இருக்கும் கபைன் என்ற நச்சு அறவே இதில் இல்லை என்று உத்திரவாதம் அளிக்கின்றனர். விரைவில் உலகம் முழுவதும் பிஸ்டாசியோ நடைமுறைக்கு வர உள்ளது. |
Geen opmerkingen:
Een reactie posten