பேஸ்புக்கில் Subscribe வசதியை பயன்படுத்துவதற்கு |
[ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 06:13.10 மு.ப GMT ] |
பேஸ்புக்(Facebook) நிறுவனம் தனது உறுப்பினர்களைத் தக்க வைக்க புத்தம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் இப்போது பார்க்கப் போவது Subscribe வசதியைப் பற்றி. Subscribe என்றால் குறிப்பிட்ட நண்பர்கள் நமக்குப் பிடித்திருந்தால் நாம் அவர்களுக்கு நண்பராகச் சேரப்போவது இல்லை. அவர்களது பப்ளிக்(Public) செய்திகள்/அப்டேட்கள் மட்டும் நமக்குத் தெரிந்தால் போதும். இதனால் Friend Request கொடுத்து தொல்லை செய்யத் தேவையில்லை. சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் அவர்களின் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். பிரபலமானவர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்ற உங்களுக்குத் தெரியாத நபர்களின் அப்டேட்களை நாமும் பெற இந்த வசதி உதவுகிறது. இதற்கு அவர்களின் புரோபைல் பக்கத்தில் சென்று Subscribe செய்தால் போதுமானது. இந்த வசதி Twitter இன் Following வசதி மற்றும் கூகிள் பிளஸின் Add to circles வசதியை ஒத்ததாக எடுத்துக் கொள்ளலாம். இதில் அவர்கள் Public என்று வெளியிடுகிற செய்திகளை மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். சரி இந்த வசதியை நமது புரொபைலுக்கு ஆக்டிவேட் செய்வது எப்படி என்று பார்ப்போம். கீழுள்ள சுட்டியைக் கிளிக் செய்து பேஸ்புக்கின் சப்ஸ்கிரைப் பக்கத்திற்கு சென்று அதில் Allow Subscribers என்ற பட்டனைக் கிளிக் செய்யுங்கள் http://www.facebook.com/about/subscriptions அடுத்து Subscribe Settings பக்கம் வரும். இதில் மூன்று அமைப்புகள் உள்ளன. 1.யாரெல்லாம் உங்கள் செய்திக்கு கமெண்ட் போடலாம் என்பது. (who can comment) 2.யாருடைய ஆக்டிவிட்டிகள் எல்லாம் உங்களுக்குத் தெரிவிப்பது என்பது.(Notification) 3.நண்பர்களுடைய நண்பர்கள் அதிகமாக நமக்கு Friend Request கொடுக்காமலிருக்க வழி செய்தல். மேற்கண்ட அமைப்புகளை அமைத்து விட்டு ஒகே பட்டனைக் கிளிக் செய்தால் உங்களுக்கான Subscribe வசதி ஆக்டிவேட் செய்யப்படும். இதன் பின் உங்கள் செய்திகளைப் பின் தொடர நினைக்கும் நண்பர்கள் Subscribe பட்டனைக் கிளிக் செய்து கொண்டால் நீங்கள் பப்ளிக்காக வெளியிடும் செய்திகள் அவர்களுக்கு சென்று சேரும். அடுத்து நாம் அடுத்தவரின் Subscribe வசதியைக் கிளிக் செய்து சேரும் போதே எந்த மாதிரியான அப்டேட்கள் மட்டுமே வேண்டும் என முடிவு செய்து கொள்ளலாம். All Updates, Most Updates, Only Important போன்ற வகைகளில் எதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். அதே போல அப்டேட் செய்யப்படும் செய்திகளைப் பொறுத்து ஃபேஸ்புக் வகைப்படுத்தியிருக்கிறது. Status, Photos, Comments, Activites, Likes போன்றவற்றில் வேண்டாதவற்றைத் தவிர்க்கலாம் அல்லது உங்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்துக் கொள்ளலாம். இந்த மாதிரி Subscribe Option களை விரும்பியவாறு தேர்வு செய்து கொள்வதன் மூலம் அடுத்தவர்களின் அத்தனை செய்திகளும் வராமல் கட்டுப்படுத்தலாம். பிடிக்கவில்லை என்றால் Unsubscribe செய்து கொள்ளுங்கள். |
தொலைக்காட்சி
zondag 25 september 2011
பேஸ்புக்கில் Subscribe வசதியை பயன்படுத்துவதற்கு
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten