தொலைக்காட்சி

donderdag 7 juni 2012

ஐரோப்பிய 2012 கால்பந்து போட்டிக்கான முழு அட்டவணை

ஐரோப்பிய 2012 கால்பந்து போட்டிக்கான முழு அட்டவணை
[ வியாழக்கிழமை, 07 யூன் 2012, 07:21.12 மு.ப GMT ]
யூரோ 2012 கால்பந்து போட்டி நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் போலந்து கிரீஸ் அணியை எதிர்த்து வார்சாவில் களமிறங்குகிறது. கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரசித்து பெற்றது உலகக் கிண்ண கால்பந்து போட்டி ஆகும். கால்பந்து போட்டிகளில் 2வது மிகப்பெரிய போட்டி ஐரோப்பிய கிண்ண போட்டி ஆகும்.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே இதில் பங்கேற்கும். உலகக் கிண்ண கால்பந்து போட்டியை போலவே ஐரோப்பிய (யூரோ) கால்பந்து போட்டியும் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
14வது ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியை போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
இந்தப் போட்டி நாளை (8ம் திகதி) தொடங்குகிறது. யூலை 1ம் திகதி வரை இந்தப்போட்டி நடைபெறும். இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு:
குரூப் 'ஏ': போலந்து, ரஷ்யா, செக்குடியரசு, கிரிஸ்.
குரூப் 'பி': நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, போர்ச்சுக்கல்.
குரூப் 'சி': ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து குடியரசு, குரோஷியா.
குரூப் 'டி': பிரான்ஸ், இங்கிலாந்து, உக்ரைன், சுவீடன்.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்அவுட்' டான 2வது சுற்றுக்கு தகுதி பெறும்.
நாளை தொடக்க ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் போலந்து-கிரீஸ், ரஷ்யா- செக்குடியரசு அணிகள் மோதுகின்றன.
கிளாஸ் ஹண்ட்லேர், ராபின்வான் பெரிஸ் (நெதர்லாந்து), சோமஸ் குளுஸ் (ஜெர்மனி), கிறிஸ்டியானா ரொனால்டோ (போர்ச்சுக்கல்), ரோபிகீன் (அயர்லாந்து), ரூனி (இங்கிலாந்து) ஆகிய வீரர்கள் முத்திரை பதிக்க கூடியவர்கள்.
நடப்பு சாம்பியனும், உலக சாம்பியனுமான ஸ்பெயின் அணி இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்த முயிற்சிக்கும் அந்த அணியில் முன்னணி வீரரான டேவிட் வில்லா காயம் காரணமாக இந்தப்போட்டித்தொடரில் ஆடவில்லை.
இது அந்த அணியை பாதிக்கலாம். யூரோ கிண்ணத்தை ஜெர்மனி அதிகபட்சமாக 3 முறை வென்றுள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் தலா 2 முறையை வென்றுள்ளன.
யூரோ தொடருக்கான முழு அட்டவணை
ஜுன் 8 - போலந்து-கிரீஸ்- வார்சா-பிரிவு ஏ
ஜுன் 8 - ரஷ்யா- செக்குடியரசு-ராக்லோ பிரிவு ஏ
ஜுன் 9 - நெதர்லாந்து-டென்மார்க்-கார்கீவ்-பிரிவு பி
ஜுன் 9 - ஜெர்மனி-போர்ச்சுகல்-லிவிவ்-பிரிவு பி
ஜுன் 10 - ஸ்பெயின்-இத்தாலி-க்டான்ஸ்க்-பிரிவு சி
ஜுன் 10 - அயர்லாந்து-குரோஷியா-போஸ்னான்-பிரிவு சி
ஜுன் 11 - பிரான்ஸ்-இங்கிலாந்து-டொனாஸ்க்-பிரிவு டி
ஜுன் 11 - உக்ரேன்-ஸ்வீடன்-கீவ்-பிரிவு டி
ஜுன் 12 - கிரீஸ்-செக்குடியரசு-ராக்லோ-பிரிவு ஏ
ஜுன் 12 - போலந்து-ரஷ்யா-வார்சா-பிரிவு ஏ
ஜுன் 13 - டென்மார்க்-போர்ச்சுகல்-லீவில்-பிரிவு பி
ஜுன் 13 - ஜெர்மனி-நெதர்லாந்து-கார்கீவ்-பிரிவு பி
ஜுன் 14 - இத்தாலி-குரோஷியா-போஸ்னான்-பிரிவு சி
ஜுன் 14 - ஸ்பெயின்-அயர்லாந்து-க்டான்ஸ்க்-பிரிவு சி
ஜுன் 15 - ஸ்வீடன்-இங்கிலாந்து-கீவ்-பிரிவு டி
ஜுன் 15 - உக்ரேன்-பிரான்ஸ்-டொனாஸ்க்-பிரிவு டி
ஜுன் 16 - செக்குடியரசு-போலந்து-ராக்லோ-பிரிவு ஏ
ஜுன் 16 - கிரீஸ்-ரஷ்யா-வார்சா-பிரிவு ஏ
ஜுன் 17 - போர்ச்சுகல்-நெதர்லாந்து-கார்கீவ்-பிரிவு பி
ஜுன் 17 - ஜெர்மனி-டென்மார்க்-லீவிவ்-பிரிவு பி
ஜுன் 18 - குரோஷியா-ஸ்பெயின்-க்டான்ஸ்க்-பிரிவு சி
ஜுன் 18 - இத்தாலி-அயர்லாந்து-போஸ்னான்-பிரிவு சி
ஜுன் 19 - இங்கிலாந்து-உக்ரேன்-டொனாஸ்க்-பிரிவு டி
ஜுன் 19 - சுவீடன்-பிரான்ஸ்-கீவ்-பிரிவு டி
காலிறுதி ஆட்டங்கள்
ஜுன் 21 - பிரிவு ஏ முதலிடம் - பிரிவு பி இரண்டாம் இடம்
ஜுன் 22 - பிரிவு பி முதலிடம் - பிரிவு ஏ இரண்டாம் இடம்
ஜுன் 23 - பிரிவு சி முதலிடம் - பிரிவு டி இரண்டாம் இடம்
ஜுன் 24 - பிரிவு டி முதலிடம் - பிரிவு சி இரண்டாம் இடம்
அரையிறுதி ஆட்டங்கள்
ஜுன் 27 - முதல் அரை இறுதி
ஜுன் 28 - இரண்டாவது அரை இறுதி
ஜுலை 1 - இறுதி ஆட்டம்
காலிறுதி ஆட்டங்கள் முறையே வார்சா, க்டான்ஸ்க், டொனாஸ்க், கீவ் நகரங்களில் நடைபெறுகின்றன.
முதல் அரையிறுதி ஆட்டம் டொனாஸ்க்கிலும், இரண்டாவது அரையிறுதி கீவ் நகரங்களில் நடக்கின்றன. இறுதி ஆட்டம் 83 ஆயிரம் இருக்கைகள் கொண்ட டொனாஸ்க் நகரின் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten