|
துடுப்பாட்ட செய்தி |
சதநாயகன் சச்சினின் மகன் முதல் சதத்தை கடந்தார் |
[ செவ்வாய்க்கிழமை, 29 மே 2012, 10:25.35 மு.ப GMT ] |
இந்தியக் கிரிக்கெட்
அணியின் துடுப்பாட்ட நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன்
டெண்டுல்கர் தனது கன்னிச் சதத்தினை விளாசியுள்ளார்.
மும்பைக் கிரிக்கெட் அமைப்பின் 14 வயதிற்குட்பட்டோருக்கான சுற்றுத்தொடரில் கார்
ஜிம்கானா அணிக்காக விளையாடிய அர்ஜூன் டெண்டுல்கர், ஒரு சிக்சர், 14 பவுண்டரிகளுடன்
124 ஓட்டங்களை விளாசினார்
.
அர்ஜூன் டெண்டுல்கரோடு இணைந்து சிறப்பாக விளையாடிய வருண் லவன்டே என்ற வீரர் 94
ஓட்டங்களைப் பெற்று அர்ஜூன் டெண்டுல்கருக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார்.
கொரிகோன் என்ற அணிக்கெதிராக நடைபெற்ற இப்போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கரின்
அணியான கார் ஜிம்கானா அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
இலகுவாக வெற்றி பெற்றிருந்தது.
இது குறித்து கார் ஜிம்கானா அணியின் பயிற்சியாளர் கூறுகையில், அர்ஜூனின்
இன்னிங்ஸ் மிகவும் திட்டமிடப்பட்டது, அவர் பந்துகளை சிறப்பாக அடித்தாடினார்.
இடதுகைத் துடுப்பாட்ட வீரரான அர்ஜூன் டெண்டுல்கர், இடதுகைச் சுழற்பந்து
வீச்சாளர்களை அடித்தாடியதாகவும், வருண் லவண்டே வலதுகைத் துடுப்பாட்ட வீரர் என்பதால்
வலதுகைச் சுழற்பந்து வீச்சாளர்களை அடித்தாடியதாகவும் அவர் தெரிவித்தார். |
|
Geen opmerkingen:
Een reactie posten