பழங்களில்
கிவி பழம் அபூர்வமான ஒன்று. இதனை மக்கள் அதிசய பழம், ஒரு வகையான சைனீஸ் நெல்லிக்கனி
என்றெல்லாம் அழைப்பார்கள்.
இது மருத்துவ குணம் வாய்ந்த, உடலுக்கு மிகச் சிறந்த பழம். ருடர்ஸ்
பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர் பால் 27 பழங்களை வைத்து ஆராய்ந்தார். இதில் கிவி
பழத்தில் புரதச்சத்தின் அளவு மற்ற பழங்களை விட அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வில்
தெரிந்துள்ளது.
கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு
வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும்.
மேலும் ஏப்ரல் 2004ஆம் ஆண்டில் நடந்த ஆய்வின் படி, வாரத்திற்கு 5 முதல் 7
பழங்கள் சாப்பிடும் குழந்தைகளின் மூச்சுக்கோளாறு பிரச்சனை குறைவாக சாப்பிடுபவர்களை
விட 44% குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால்
வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு
குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது.
வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி
பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ஆன்டி
ஆக்ஸிடன்ட் அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது.
போலிக் ஆஸிட் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும்
சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும்.
நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்பிணிகளுக்குத் தேவையான
வைட்டமின்களையும் தருகிறது. மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததோடு
மட்டுமல்லாமல் இதய நோய் வராமலும் தடுக்கிறது.
டையட் மேற்கொள்வதற்கு சிறந்ததாகவும் உள்ளது. ஏனென்றால் இதில் இரும்புச்சத்து
இருப்பதால் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கும்.
மேலும் இரும்புச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதய நோய் மற்றும் சில வகை
புற்றுநோய்களையும் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைப்பதோடு, உடலுக்கு சிறந்த
பழமாகும்.
கிவி பழத்தில் ஜிங்க் இருப்பதால் தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு
சிறந்தது. |
Geen opmerkingen:
Een reactie posten