குரோம் உலாவிக்கு கடவுச்சொல் கொடுத்து உங்களது இரகசியங்களை பாதுகாக்க |
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:00.04 மு.ப GMT ] |
நீங்கள் பயன்படுத்தும் கூகுள்
குரோம் உலாவியில் கடவுச்சொல் கொடுத்து, பாதுகாக்கலாம். இதற்கு உதவுவது தான் Simple
Password Startup வசதி.
இந்த நீட்சியை குரோம் உலாவியில் இணைத்து விட்டு Tools - Extension - Simple
Startup Password - Options பகுதிக்கு சென்று உங்களுக்கு என ஒரு கடவுச்சொல்லை
கொடுத்து சேமித்து கொள்ளுங்கள் . இனி ஒவ்வொரு முறையும் உங்கள் கணணியில் உள்ள குரோம் உலாவியை ஓபன் செய்யும் பொழுதும், முகப்பு பக்கத்தில் கடவுச்சொல் கேட்கும். கடவுச்சொல்லை சரியாக கொடுத்தால் தான் உலாவியை உங்களால் உபயோகிக்க முடியும், ஒரே முறை தவறாக கொடுத்தாலும் உலாவி மூடி விடும். கடவுச்சொல் தெரியாமல் ஓபன் செய்பவர்களுக்கு முகப்பு பக்கத்தை பார்ப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. இனி உலாவியில் உள்ள உங்களின் ரகசியங்களை சுலபமாக பாதுகாத்து கொள்ளலாம். சுலபமாக ஞாபகம் வைத்திருக்கும் படி Startup கடவுச்சொல்லை கொடுக்கவும். ஒருவேளை கடவுச்சொல்லை மறந்து விட்டால் குரோம் உலாவியை மறுபடியும் நிறுவுவதை விட வேறு வழி இல்லை. தரவிறக்க சுட்டி |
தொலைக்காட்சி
donderdag 17 mei 2012
குரோம் உலாவிக்கு கடவுச்சொல் கொடுத்து உங்களது இரகசியங்களை பாதுகாக்க
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten