தொலைக்காட்சி

zondag 2 oktober 2011

இன்று சர்வதேச அகிம்சை தினம்

ஏனைய செய்தி
இன்று சர்வதேச அகிம்சை தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஒக்ரோபர் 2011, 04:01.34 மு.ப GMT ]
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான இன்று(அக்டோபர் 2ம் திகதி) சர்வதேச அகிம்சை தினமாக உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட அகிம்சை போராட்டங்கள் மூலம் அறவழியில் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்தார்.
இவரது அகிம்சை தான் இன்றைய உலகுக்கு அவசிய தேவை. இதை உணர்த்தும் விதமாக இவரது பிறந்த நாளையொட்டி சர்வதேச அகிம்சை தினமாக ஐ.நா சபை அறிவித்தது. அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், வன்முறையற்ற வாழ்க்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மக்களுக்கு இத்தினம் உணர்த்துகிறது.
அகிம்சை: தங்களது உரிமைகளை, கோரிக்கைகளை வன்முறை வழியில் அடையாமல் அறவழியில் செல்வதே அகிம்சை. எவருக்கும் துன்பமோ, காயமோ, உயிரிழப்போ ஏற்படக் கூடாது என்பதுதான் இதன் முக்கிய நோக்கம்.
இன்று உலகில் வன்முறை செயல்கள் அதிகரித்து விட்டது. இதனால் உயிர், உடமைகள் பறிக்கப்பட்டு அமைதி கெடுகிறது.
இன்றைய சூழலில் ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளுடனான பிரச்னைகளை போர் மூலம் தீர்க்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.
அப்போதுதான் உலகில் அமைதி உருவாகும். உலக மக்களின் பிரச்னைகளும் தீர்க்கப்படும்.

Geen opmerkingen:

Een reactie posten