தொலைக்காட்சி

vrijdag 28 oktober 2011

கோலாகலமாக நடந்தேறிய காம்பீர் - நடாஷா திருமணம்: சச்சின், ஷாருக்கான் நேரில் வாழ்த்து

கோலாகலமாக நடந்தேறிய காம்பீர் - நடாஷா திருமணம்: சச்சின், ஷாருக்கான் நேரில் வாழ்த்து
[ வெள்ளிக்கிழமை, 28 ஒக்ரோபர் 2011, 10:18.44 மு.ப GMT ]
இந்திய கிரிக்கட் அணியின் முன்னணி ஆட்டக்காரர் கவுதம் காம்பீர். இவர் நடாஷா ஜெயின் என்ற பெண்ணை காதலித்து வந்தார். நடாஷா டெல்லியைச் சேர்ந்த பெரிய தொழில் அதிபரின் மகள் ஆவார். கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் பச்சை கொடி காட்டிவிட்டனர்.
6 மாதத்துக்கு முன்பே காம்பீர் - நடாஷா திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து - இந்திய அணிகள் இடையேயான போட்டியில் விளையாட ஒப்புக் கொண்டிருந்ததால் திருமணம் தள்ளிப் போடப்பட்டது.
இன்று காம்பீர் - நடாஷா திருமணம் டெல்லி அருகே குர்கானில் உள்ள பண்ணை வீட்டில் கோலாகலமாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர், நடிகர் ஷாருக்கான் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவில் பிரபல பாடகர் ரகாத்பதே அலிகானின் கச்சேரி நடந்தது.
திருமணம் காரணமாக காம்பீர் நாளை நடைபெறும் 20 ஓவர் போட்டியில் விளையாடவில்லை. அணி வீரர்களும் கொல்கத்தாவில் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதால் திருமணத்தில் பங்கேற்கவில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கிரிக்கட் பிரபலங்கள், நடிகர்- நடிகைகள், பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten