தொலைக்காட்சி

donderdag 13 oktober 2011

மஹிந்த ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகள் வெறுக்கத்தக்க செயல் என சந்திரிகா தெரிவிப்பு : விக்கிலீக்ஸ்

மஹிந்த ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகள் வெறுக்கத்தக்க செயல் என சந்திரிகா தெரிவிப்பு : விக்கிலீக்ஸ்
[ வியாழக்கிழமை, 13 ஒக்ரோபர் 2011, 02:57.23 AM GMT ]
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் நடத்திவரும் அரசியல் வெறுக்கத்தக்கது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதுவர் பெற்றீசியா பியூட்டினியஸிடம் இந்த கருத்தை சந்திரிகா வெளியிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் ராஜபக்சவின் குடும்பத்தை படிப்பறிவற்ற நாகரீகமற்றவர்கள் என்று சந்திரிகா குறிப்பிட்டதாக பியூட்டினியஸ் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் சூழ்நிலை, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் ராஜபக்சவின் அரசியல் ஒரு சாக்கடையாக உள்ளது என்று சந்திரிகா குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
விக்கிலீக்ஸ் தகவல்படி, இந்த கருத்துக்களை சந்திரிகா பண்;டாரநாயக்க குமாரதுங்க, 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி பியூட்டினியஸிடம் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் ஊழல்கள் மலிந்துள்ளன.
அரசியல் ஆரோக்கியமாக அமையவில்லை. இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புகழை மஹிந்த ராஜபக்ச பாதிக்கச் செய்துள்ளதாக சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, அரசியலில் பிரவேசித்தமை குறித்து தாம் ஆச்சரியப்படுவதாக குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி தேர்தல் நியாயமானதாக இருக்குமானால், பொன்சேகா நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சந்திரிகா கூறியுள்ளார்.
பௌத்த தீவிரவாத கொள்கையை கொண்ட பொன்சேகா, மஹிந்தவை போலன்றி, தமது உறுதிமொழிகளில் இருந்து விலகிச் செல்லமாட்டார் என்று சந்திரிகா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் நாடடு மக்கள் மாற்றம் ஒன்றை விரும்புவதாக சந்திரிகா, பியூட்டினியஸிடம் தெரிவித்துள்ளார்

Geen opmerkingen:

Een reactie posten