ஒலிவடிவம்: |
திருவனந்தபுரத்தில் எமிரேட்ஸ் - சிறிலங்கன் விமானங்கள் ஒரே ஓடுபாதையில்! தெய்வாதீனமாக தப்பிய 400 பயணிகள்
[ சனிக்கிழமை, 10 டிசெம்பர் 2011, 04:38.29 AM GMT ]
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை எமிரேட்ஸ் மற்றும் சிறிலங்கன் விமானங்கள் இரண்டும் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டதுடன், இந்த விமானங்களில் இருந்த 400 பயணிகள் உயிர் தப்பினர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முற்பகல் 11.10 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் ஒன்று கட்டார் நாட்டுக்கு புறப்பட்டது.
விமானத்தள ஓடுபாதையில் இருந்து இந்த விமானம் மேலே எழும்பிக் கொண்டிருந்த அதேநேரம், கொழும்பில் இருந்து வந்த எயர்லங்கா விமானம் அதே ஓடுபாதையில் தரையிறங்கியது.
சில வினாடிகள் வித்தியாசத்தில் விமானங்கள் ஒன்றை ஒன்று மிக அருகே கடந்து சென்றன. சில வினாடிகள் தாமதித்திருந்தால் கூட இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கும்.
ஆனால், தெய்வாதீனமாக அது தவிர்க்கப்பட்டது. இதனால், இந்த விமானங்களில் இருந்த 400 பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து சமிக்ஞை கொடுப்பதில் ஏற்பட்ட தவறுதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என விமானநிலைய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து விசாரணை நடத்த திருவனந்தபுரம் விமான நிலைய பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Geen opmerkingen:
Een reactie posten