தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம்: தமிழக முதல்வர் அஞ்சலி |
[ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 08:11.31 AM GMT +05:30 ] |
இந்திய மாநிலமான தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினமான இன்று(24.12.2011) தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட அதிமுகவினர் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள். |
தமிழகத்தில் கடந்த 1970 ம் ஆண்டில் திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு மன்னாதி மன்னனாக எம்.ஜி.ஆர். என்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன் வலம் வந்தார்.
கடந்த 1977-ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து எம்.ஜி.ஆர் தமிழக முதல்வர் ஆனார். தன்னுடைய முதல்வர் பதவியில் தமிழகத்தில் ஏழை மக்களின் நல்வாழ்வுக்கும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் அரும்பாடு பட்டார்.
கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி எம்.ஜி.ஆர் இயற்கை எய்தினார். அவரது 24-வது நினைவு தினமான இன்று, சென்னை மெரினா கடற்கரையில் அவருடைய சமாதிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதிமுக அமைச்சர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். |
Geen opmerkingen:
Een reactie posten