தொலைக்காட்சி

zondag 25 december 2011

Win Zip 16 புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

Win Zip 16 புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 23 டிசெம்பர் 2011, 06:24.21 மு.ப GMT ]
கோப்புகளை சுருக்கி பதிந்து காப்பதில் வெகு காலமாகப் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் மென்பொருள் Win Zip. இதன் பதிப்பு 16 அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த பதிப்பில் 64 பிட் இஞ்சின் பயன்படுத்தப்படுவதால் சுருக்கி விரிக்கும் பணி தற்போது அதிக வேகமாகவும், எளிதாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
சுருக்கப்பட்ட கோப்பு பெரியதாக இருந்தால் மின்னஞ்சலில் அனுப்புவது இயலாது. இதற்கு புதியதாக Zip Send என்ற வசதி தரப்பட்டுள்ளது. You Send It என்ற இணையத்தளத்தின் கூட்டுடன் 50 எம்.பி சுருக்கப்பட்ட கோப்பு அனுப்பப்படுகிறது.
நீங்கள் ஏற்கனவே Zip Send Pro தளத்தின் பயனாளர் என்றால் இந்த அளவு 2 ஜிபி வரை அனுமதிக்கப்படுகிறது. அடுத்த புதிய வசதி Zip Share.
இதன் மூலம் Zip செய்யப்பட்ட கோப்பை கிளவ்ட் கம்ப்யூட்டிங் வசதிக்கு அனுப்பி விட்டு, அதற்கான லிங்க் ஒன்றை பேஸ்புக் தளத்தில் நம் நண்பர்கள் தரவிறக்கம் செய்திட வசதியாக அனுப்பலாம்.
எதிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய வகையில் Zip to Bluray என்ற ஒரு வசதி கிடைக்கிறது. இதன் மூலம் சுருக்கப்பட்ட தகவலினை 50 ஜிபி அளவில் ஒரு புளுரே டிஸ்க்கில் பதிய முடியும்.
புளுரே டிஸ்க் பயன்பாடு பரவலாகக் கிடைக்கையில் இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தத்தில் ஏற்கனவே பல வசதிகளைக் கொண்டுள்ள Win Zip புரோகிராமில் கூடுதல் பயன்பாடு பல சேர்க்கப்பட்டுள்ளது.
தரவிறக்க சுட்டி

Geen opmerkingen:

Een reactie posten