ஒலிவடிவம்: |
இன்று பூரண சந்திர கிரகணம்! இலங்கையில் முழுமையாக காணலாம்
[ சனிக்கிழமை, 10 டிசெம்பர் 2011, 03:21.42 AM GMT ]
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று சனிக்கிழமை நிகழவுள்ளதாகவும் இதனை இலங்கையில் முழுமையாக காணக்கூடியதாக இருக்கும் எனவும் ஆதர் சி. கிளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
சூரிய மறைவுக்குப் பின் இன்று மாலை 6.16 முதல் இரவு 9.48 வரையான காலப் பகுதியில் இலங்கையில் இந்த சந்திர கிரகணத்தைக் காண முடியும் என ஆதர் சி. கிளார்க் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைத்து 51 நிமிடங்கள் நீடிக்கவுள்ளது. என்றும் இவ்வாறு இலங்கை நேரப்படி இன்று இரவு 7.36 மணி முதல் 8.27 மணிவரை பூரண சந்திர கிரகணம் தென்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 மணி 52 நிமிடம் 17 வினாடிகள் நீடிக்கவுள்ள சந்திர கிரகணம் இன்று இரவு 11 மணிக்கு நிறைவடையும் எனவும் ஆதர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திர கிரகணம் அலஸ்கா, வடக்கு கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, மத்திய மற்றும் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் தென்படும் என நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது

Geen opmerkingen:
Een reactie posten