தொலைக்காட்சி

zaterdag 24 december 2011

அவதூறு செய்திகளை சமூக வலைதளங்கள் அகற்ற வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அவதூறு செய்திகளை சமூக வலைதளங்கள் அகற்ற வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
[ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 07:39.34 AM GMT +05:30 ]
உலகின் சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியுப், கூகுள் ஆகியவைகளில் இடம்பெற்றுள்ள அவதூறான செய்திகளை எதிர்வருகிற பெப்ரவரி-26 ஆம் திகதிக்குள் அகற்றும் படி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகில் சமூக வலைதளங்களால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகமாக காணப்படுகின்றது. பேஸ்புக், யூடியுப், கூகுள் போன்ற சமூக வலைதளங்களின் மூலமாக அரசியல் வாதிகள், நாட்டின் முக்கியஸ்தர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்களைப் பற்றி விமர்சகர்கள் அவதூறாக எழுதிவருகின்றனர்.

இதன்காரணமாக நாட்டில் பல்வேறு பிரச்சினைகளும், வருத்தங்களும் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அவதூறான செய்திகளை வெளியிட்டுள்ள 21 சமூக வலைதளங்களின் மீது டெல்லி உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வருகிற 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதிக்குள், தங்களுடைய வலைதளங்களில் இடம்பெற்றுள்ள அவதூறான செய்திகளை அகற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Geen opmerkingen:

Een reactie posten