தொலைக்காட்சி

maandag 29 augustus 2011

என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிர்களை காப்பாற்ற பயன்படும் என்று நம்பிகையுடன் செல்கிறேன்

Photo
என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிர்களை காப்பாற்ற பயன்படும் என்று நம்பிகையுடன் செல்கிறேன்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 10:16.15 PM GMT ]
21 வருட வாழ்க்கை சிறை கம்பிகளுக்குப் பின்னால் தமது வாழ்கையை கழித்துவிட்ட மரண தண்டனை தீர்க்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு 11 வருடங்களுக்கு முன் இந்திய ஜனாதிபதி அனுப்பட்ட கருணை மனு இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு...
அவர்கள் தண்டனை ஊர்ஜிதப்பட்டு தூக்குக் கயிற்றை எதிர்பார்த்து இருக்கும் நிலையில், உலகத்தில் மிக பெரிய ஜனநாயக நாடாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் கேட்டு நிற்கும் நாடாகிய இந்தியா மரண தண்டனையை நிறைவேற்றலாமா?
11 வருடங்கள், இந்திய ஜனாதிபதியிடம் கருணை மனு அனுப்பி வைக்கப்பட்ட பின், 3 ஜனாதிபதிகளுக்கு பின் இன்றைய ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டிலால் பேரறிவாளன், சாந்தன், முருகன் முன்வைத்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது..
21 வருட சிறை தண்டனைக்கு பின் இந்த 3 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை தீர்மானமான பின் தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், தூக்கு தண்டனைக்கு எதிரான அமைப்புகள், தமிழ் இளைஞர் அமைப்புகள் என்று எல்லோரும் கட்சி பாகுபாடின்றி தமிழகம் எங்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். மனித சங்கிலி போராட்டம், மோட்டார் வண்டி ஊர்வலப் போரட்டம், உண்ணாவிரதப் போராட்டம் என்று தமிழகம் எங்கும் போராட்ட களமாக மாறுகிறது.
மீண்டும் நீதிமன்றங்கள் முன் இந்திய முன்னிலை சட்டத்தரணிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தீர்ப்பை தடுத்து நிறுத்தம் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் முன்று இளம் தமிழ் பெண் சட்டத்தரணிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்கள்.
இந்தப் போராட்டங்களுகிடையே காஞ்சிபுரம், ஊரிகையை சேர்ந்த செங்கொடி என்ற 22 வயது சகோதரி "தோழர்முத்துகுமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிர்களை காப்பாற்ற பயன்படும் என்று நம்பிகையுடன் செல்கிறேன்" என்று எழுதிவைத்து விட்டு தன்னை தீயிற்கு இரையாகி ஈகை ஏந்தினாள் இந்த தமிழ் பெண்.
இந்த இளைஞர்கள் தமிழ் மக்கள் விடுதலைக்காக தொடர்ந்தும் தமது உயிரை தியாகம் செய்துகொண்டிருகிறார்கள். உங்கள் உன்னதமான உயிர் இந்த தமிழ் மண்ணுக்கு தேவை, தமிழ் மக்களின் விடுதலைக்கு தேவை, உங்கள் வாழ்வு தான் அடுத்த விடுதலை அடைந்த சமுதாயத்தை உருவாக்க உதவும். இந்த 3 தமிழர்களின் விடுதலைக்காக போராட நீங்கள் வேண்டும், தியாகங்கள் போதும் நாம் ஒன்ற இருந்து போராடுவோம் என்று எமது தமிழக உறவுகளுக்கு பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை சார்பாகவும் உலக தமிழ் மக்கள் சார்பாகவும் கேட்டு கொள்கிறோம்.
இன்று ஜனநாயத்தில் முன்னோடியாக இருக்கும் நாடுகளில் எல்லாம் மரண தண்டனை சட்டத்தில் இருந்து அகற்றப்பட்டு கொலைக்கு தண்டனை கொலை அல்ல என்ற புனித யதார்த்தத்தின் அடிப்படையில் மரண தண்டனை அழிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பல நிரபராதிகள் இந்த சட்டங்களினால் பாதிக்கப்படுகிறார்கள்.
பல அரசியல் காரணங்கள், நீதிமன்றங்களில், போலீஸ் இடையே அரசியல் கட்சிகளின் மேலாட்சி குற்றம் செய்யாதவர்களை எல்லாம் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டிக்கப்படுகிரார்கள். இன்று பல ஜனநாய நாடுகளில் நீதி துறையில் இருந்து அரசு பிரிக்கப்பட்டு தனித்தன்மையோடு இயங்குகிறது.
இந்த புது உலகத்தில் கால் பதிக்க நினைக்கும் இந்தியா, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இடம் கேட்டுநிற்கும் இந்தியா இன்று இந்த மரண தண்டனை என்ற கோரமான தண்டனையில் இருந்து விடுபட்டு பல ஜனநாயக நாடுகள் போல் மரண தண்டனையை தமது சட்ட புத்தகத்தில் இருந்து அகற்றவேண்டும்
மேலத்தேய நாடுகளில் revising கமிட்டி என்று தீர்ப்புகளில் பிழைகள் இருக்குமானால் அதை மறு பரிசீலனை அளிக்க பல வழிகள் உள்ளது. மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவில் சட்டத்தில் அரசியல் கட்சிகளின் ஆளுமை உள்ள நிலையில் ஒரு நிரபராதி தன்னை காப்பாற்றிகொள்ள என்ன வழி இருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வி.
இதை மக்கள் சிந்தனையில் எடுத்து கொண்டு சட்டமாற்றங்களை உருவாக்க போராட வேண்டும். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தீர்ப்பை முன் உதாரணமாக வைத்து இவர்களுக்கு ஒரு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் வரை, உயிர் தியாகங்களை விட்டு விட்டு தமிழர்கள் எல்லோரும் போராட வேண்டிய நேரமிது.

Geen opmerkingen:

Een reactie posten