தொலைக்காட்சி

zondag 14 augustus 2011

“தமிழர்கள் அழுக்கானவர்கள்”: தமிழர்களை அவமதித்த அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்!- முதல்வர் ஜெயலலிதா

[ ஞாயிற்றுக்கிழமை, 14 ஓகஸ்ட் 2011, 03:13.57 AM GMT ]
எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது' என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார். இனவெறி கொண்ட இந்தப் பேச்சு, மிகவும் கண்டனத்துக்குரியது. இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை வற்புறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.
அதில், `நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரயிலில் சென்றேன். இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை.
அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது' என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார்.
இன வெறி கொண்ட இந்த பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும்.
எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten