[ புதன்கிழமை, 17 ஓகஸ்ட் 2011, 01:45.47 AM GMT ]
ஏறாவூர், ஏறாவூர் பொலிஸ்
பிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் மர்ம மனிதன் ஒருவரின் ஊடுருவிய தகவல் ஒன்றினையடுத்து பாதுகாப்புத் தேடி ஓடிய பெண்மணி ஒருவர் மீது புகையிரத வண்டி மோதியதில் குறித்த பெண் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

வந்தாறுமூலை, பலாச்சோலை பேச்சிக்கிராமம் பகுதியைச் சேர்ந்த எட்டுப்பிள்ளைகளின் தாயாரான ஆறுமுகம் பாக்கியம் (42வயது) என்றழைக்கப்படும் பெண்மணியே இச்சம்பவத்தில் பலியானவராவார்.
நேற்று முன்தினம் இரவு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்டுச் சென்ற புகையிரத வண்டியே இவர் மீது மோதுண்டுள்ளது.
மேற்படி பகுதியில் மர்ம மனிதன் ஊடுருவியுள்ளான் என்ற கதை பரவியுள்ளதும் தனது பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பாதுகாப்புத் தேடி இப்பெண்மணி புகையிரத வண்டி வருகின்ற சத்தத்தையும் கவனியாது ஓடியுள்ளார். இதனால் இவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இவரின் சடலம் மீட்கப்பட்டு வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவத்தினைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
மர்ம மனிதனின் நடவடிக்கைகளினால் இவ்வாறான அப்பாவி பொதுமக்கள் பலியாவது தொடர்பிலும் பாதிக்கப்படுவது தொடர்பிலும் மக்கள் கவலை தெரிவிப்பதோடு அரசாங்கம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்காதா என்றும் வினவுகின்றனர்.

Geen opmerkingen:
Een reactie posten