தொலைக்காட்சி

vrijdag 19 augustus 2011

கிளிநொச்சி பிரதேசங்களிலும் கிறீஸ் மனிதன் ஊடுருவியுள்ளதாக மக்கள்

கிளிநொச்சி பிரதேசங்களிலும் கிறீஸ் மனிதன் ஊடுருவியுள்ளதாக மக்கள் பதற்றம்
[ வியாழக்கிழமை, 18 ஓகஸ்ட் 2011, 08:15.22 AM GMT ]
கிளிநொச்சி 8ம்கட்டைப் பிரதேசத்தில் கிறிஸ் பூசிய கறுத்த மனிதன் கிராமத்திலுள்ள பெண்களை துரத்தினான் எனப்பரவிய செய்தியையடுத்துப் பிரதேசத்தில் நேற்றிரவு பதற்றம் நிலவியது.
இந்நிலையில் மக்கள் குழுக்களாக பிரிந்து வீடுகளில் தங்கியிருக்க ஆண்கள் வீதிகளில் காவல் நின்றுள்ளனர்.
நேற்று மாலை6.30 மணியளவில் 8ம்கட்டை பிரதேசத்தில் காட்டு ஓரத்திலிருந்து வந்த உடலில் கிறிஸ் போன்ற பொருளை உடலில்; பூசிக்கொண்ட கறுத்த மனிதர்கள் கிராமத்தில் கன்னிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 3பெண்களைத் துரத்தி வந்துள்ளார். அவர்கள் கூச்சலிட்டபடி குடிமனைக்குள் ஓடி வந்ததையடுத்து கிராமமக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த மர்மமனிதன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். இதனைடுத்து 8ம் கட்டை, பாரதிபுரம், மணியங்குளம், வன்னேரிக்குளம், அக்கராயன்குளம் போன்ற பகுதிகளில் மக்கள் குழுக்களாக பிரிந்து பாதுகாப்பான கல் வீடுகளில் தஞ்சம் புகுந்து தங்கியிருந்துள்ளனர்.
மேலும் முறிகண்டி பாரதிபுரம் 300 வீட்டுத்திட்டம் பகுதியில் கிறிஸ் மனிதர்களால் பெண்னொருவர் வாள்வெட்டுக்கிலக்காகியதாக பரவிய வதந்தியால் முறிகண்டிப் பிரதேசத்தில் பரபரப்பு நிலவியது. முற்றிலும் காட்டுப்பகுதியை அண்டியுள்ள இந்தப்பகுதியில் இரவு நேரம் தாம் மிகுந்த அச்சத்துடன் இருந்ததாக மக்கள் தெரிவிதனர்.
இதேபோல் வன்னேரிக்குளம் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த சிரமதானமொன்றின்போது கிறிஸ் மனிதன் தொடர்பாகவும் அதன் அச்சுறுத்தல் தொடர்பாகவும் தெரியப்படுத்திய இராணுவத்தினர் காட்டு ஓரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இரவு வேளைகளில் வீதிக்கரை வீடுகளில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் காட்டுப்பகுதியில் பாதுகாப்பிற்க்காக படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரியப்படுத்தியுள்ளனர். இதனால் இந்தப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்தும் பதற்றமும் அச்சமான சூழலும் நிலவி வருவதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஆனைவிழுந்தான் குளத்தினோரத்தில் குடியிருந்த மக்கள் அழைத்துவரப்பட்டு ஆனைவிழுந்தான் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten