[ புதன்கிழமை, 17 ஓகஸ்ட் 2011, 03:15.55 AM GMT ]

உள்ள அக்கராயன் குளம் பகுதியில் தான் பெற்ற குழந்தையை தீமூட்டி எரித்த கொடூர தாயொருவர் நேற்றுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது:
அக்கராயன் சந்திக்கு அருகில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தான் பெற்றெடுத்த குழந்தையை வீட்டுக் குப்பைக்குள் போட்டுத் தீ மூட்டி எரித்துள்ளார்.
இதனைக் கண்ட அயல் வீட்டார் இராணுவத்துக்குத் தகவல் கொடுக்க, இராணுவத்தினர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய தாயைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அந்தப் பெண் கணவனை இழந்தவர் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்ததாகத் கூறியுள்ள பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
வறுமை காரணமாக குழந்தையை வளர்ப்பது கஷ்டம் என நினைத்தோ அல்லது போரினால் கணவனையிழந்து மனோ நிலையில் பாதிக்கப்பட்டவராகவோ இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Geen opmerkingen:
Een reactie posten