தொலைக்காட்சி

dinsdag 22 november 2011

பொத்துவில் பகுதியில் புதையல் தோண்டிய இராணுவத்தினர் உட்பட்ட 10 பேர் கைது

பொத்துவில் பகுதியில் புதையல் தோண்டிய இராணுவத்தினர் உட்பட்ட 10 பேர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011, 03:09.06 AM GMT ]
பொத்துவில் பிரதேச காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய நான்கு இராணுவத்தினர் உட்பட பத்துப் பேரை கடந்த சனிக்கிழமை மாலை கைது செய்த பொத்துவில் பொலிஸார் புதையலில் இருந்து எடுக்கப்பட்ட மாணிக்கக் கற்கள் பளிங்குக்கற்கள் போன்றவற்றை மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொத்துவில் பாணமை பிரதான வீதியில் இருந்த 8 கிலோமீற்றர் தூரம் கொண்ட காட்டுப்பகுதியை அண்டிய பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை புதையல் தோண்டிக் கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்தபோது மூன்று பேர் கைது செய்யப்பட்டதுடன் ஏனையவர்கள் தப்பியோடினர்.
இச்சம்பவத்தில் தப்பிச் சென்றவர்களிடம் புதையலிலிருந்து எடுக்கப்பட்ட மாணிக்கக் கற்கள் பளிங்குக் கற்கள் இருந்ததாகவும், இதில் நான்கு பேர் இராணுவத்தினர் எனவும் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்தது.
கைது செய்த மூவரையும் சனிக்கிழமை பொத்துவில் நீதிவான் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர் செய்த போது இவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து தலைமறைவாகிய 4 இராணுவத்தினரையும் ஏனைய இருவரையும் சனிக்கிழமை பிற்பகலில் கைது செய்த பொலிஸார் அவர்களிடமிருந்து புதையலிலிருந்து எடுக்கப்பட்ட மாணிக்கக்கற்கள் பளிங்குக்கற்கள் போன்றவற்றை மீட்டுள்ளதாகவும் கைது செய்த சந்தேகநபர்களையும் ஞாயிற்றுக்கிழமை காலையில் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்தபோது இவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை மற்றும் பிறமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten