தொலைக்காட்சி

woensdag 23 november 2011

நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்

நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்
[ திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011, 09:10.27 பி.ப GMT ]
இணையத்தில் வந்துடன் தட்டச்சு செய்யும் முதல் தளமாகவும், மிகப்பெரிய சமூக தளமாகவும் Face Book மாறிவிட்டது. இப்பொழுது இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. தற்போது இந்தத்தளத்தினை நாளொன்றிற்கு 500 மில்லியனுக்கும் மேற்ப்பட்டோர் உபயோகப் படுத்துகின்றனர். நாம் பயன்படுத்தும் முகப்புதகத்தின் பயன்பாட்டை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அதன் தோற்றம் ஒரே மாதிரியாக இருப்பது தான் நம்மில் அநேகருக்கு மிகவும் சலிப்பை ஏற்படுத்துகின்றது.
இதை மாற்றும் வகையில் அந்த நிறுவனம் ப்ரொபைல் தீம்ஸை தற்போது அறிமுகபடுத்தி இருக்கிறது. அதன் மூலம் FACEBOOK-இன் தோற்றத்தை மாற்றி அமைக்கலாம். ஆனால் அது மிகவும் குறைவாக உள்ளது. மேலும் அவை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்குமா என்று தெரியாது. அதனால் நாம் விரும்பும் வண்ணம் தீம்களை வடிவமைப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.
இணையதள முகவரி
இந்த தளத்தில் நீங்கள் விரும்பும் வண்ணம் உங்களுக்கான தீம்ஸை வடிவமைக்கலாம். மேலும் அதில் உள்ள தீம்சையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம், முதலில் நீங்கள் அதற்குரிய மென்பொருளை அந்த தளத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவேண்டும்.
மேலும் இதில் நீங்கள் இன்னும் சில மாற்றங்களை செய்யலாம், உங்கள் கணக்கில் வலது பக்கத்தில் உள்ள SETTINGS என்ற பொத்தானை அழுத்தவும் அதில் SNOW FLAKES மற்றும் FALLING HEARTS போன்றவற்றை பயன்படுத்தலாம், தேவை இல்லை என்றல் அதை DISABLE செய்து கொள்ளுங்கள்.
மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடலை தேர்வு செய்து கேட்கலாம் மற்றும் இதில் THUMB NAIL VIEW போன்ற வசதிகள் இந்த மென்பொருளில் உள்ளது. இதை பதிவிறக்கி உங்கள் பக்கத்தை அழகாக மாற்ற உதவுகின்றது.
பழைய பக்கம்

புதிய பக்கம்

Geen opmerkingen:

Een reactie posten