தொலைக்காட்சி

donderdag 24 november 2011

மழை வெள்ளத்தில் மட்டக்களப்பு! மக்களின் வசதிக்காக படகுப் போக்குவரத்து!

மழை வெள்ளத்தில் மட்டக்களப்பு! மக்களின் வசதிக்காக படகுப் போக்குவரத்து!
[ வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011, 05:54.35 AM GMT ]
பெய்துவரும் பருவகால அதிக மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் வசதி கருதி படகுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை செயலாளர் பிரிவின் சுரம்படித்தீவு கிராமத்தில் வெள்ளம் காரணமாக 7 குடும்பங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.
கிரான் பிரதேச செயலகப் பிரிவின் பல வீதிகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக மக்களின் வசதி கருதி 03 படகுகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, பொலநறுவை மாவட்டத்திலும் பாலமொன்று உடைந்து வீழ்ந்ததில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten