|
|
குறைந்த சக்தி தரும் உணவு வகைகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயை குணமாக்கலாம் |
[ புதன்கிழமை, 30 நவம்பர் 2011, 09:50.04 மு.ப GMT ] |
தற்போது உலகம் முழுவதும் மக்கள் பெரும்பாலும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நெதர்லாந்தை சேர்ந்த லெய்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் புதிதாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
அதன்படி இரண்டாம் பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுப்பாட்டின் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், குறைந்த சக்தி(கலோரி) தரும் உணவு வகைகளை 4 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் அவர்களை பாதித்துள்ள நீரிழிவு நோய் குணமாகி விடும்.
இதன்மூலம் அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பது குறையும், இருதயத்தில் கொழுப்பு படிவது தடுக்கப்படும், இருதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். |
|
Geen opmerkingen:
Een reactie posten