தொலைக்காட்சி

dinsdag 15 november 2011

சர்வதேச கிரிக்கட்டில் 22 ஆண்டுகளை நிறைவு செய்தார் சச்சின்

சர்வதேச கிரிக்கட்டில் 22 ஆண்டுகளை நிறைவு செய்தார் சச்சின்
[ செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011, 12:59.00 பி.ப GMT ]
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் தனது 22வது ஆண்டை இன்று நிறைவு செய்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். சாதனைகளுக்கு மறுபெயர் சச்சின் எனலாம். தற்சமயம் தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் சாதனை படைத்து வருகிறார் சச்சின்
.
இந்நிலையில் மேலும் ஒரு சாதனை மகுடமாக இன்றுடன் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாட வந்து 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
கடந்த 1989ம் ஆண்டு இதே நாளில் 16 வயது இளம் பாலகனாக கராச்சி தேசிய ஸ்டேடியத்திலும், தனது டெஸ்ட் கிரிக்கட் வாழ்க்கையிலும் அடியெடுத்து வைத்தார் சச்சின்.
தற்போது தனது 38வது வயதில் 182 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 ஆயிரத்து 48 ரன்களும், 453 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18 ஆயிரத்து 111 ரன்களும் எடுத்துள்ளார்.
சாதனை நாயகன் சச்சின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை இவர் டெஸ்டில் 52, ஒருநாள் போட்டியில் 48 சதம் அடித்து, அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்.
ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் சச்சின் படைத்துள்ளார். இந்திய “மாஸ்டர் துடுப்பாட்ட வீரர்” சச்சின், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட்(11 சதம்) மற்றும் ஒருநாள்(9 சதம்) அரங்கில் அதிக சதம் அடித்துள்ளார்.
சச்சின் சதத்தில் சதமடித்து புதிய சாதனை படைக்க வேண்டும் என இந்திய கிரிக்கட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் நீண்ட நாட்களக காத்துள்ளனர். தற்சமயம் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அதிக நாட்கள் விளையாடியவர்கள் வரிசையில் 9வது இடத்தில் உள்ளார் சச்சின்.
இங்கிலாந்தைச் சேர்ந்த வில்பர்ட் ரோட்ஸ் தனது நாட்டுக்காக 30 வருடம், 315 நாட்கள் விளையாடியதே சாதனையாக உள்ளது. சச்சின் இந்த சாதனையையும் முறியடிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு கிரிக்கட் வீரரின் ஆசையாக இருக்கும்.
இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் டென்னிஸ் பிரவுன் க்ளோஸ் 26 வருடம் 356 நாட்கள் விளையாடி உள்ளார். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தின் பிராங்க் வுல்லி 25

Geen opmerkingen:

Een reactie posten