தொலைக்காட்சி

zaterdag 19 november 2011

மாரடைப்பை தடுக்கும் புது வித மருந்து கண்டுபிடிப்பு

மாரடைப்பை தடுக்கும் புது வித மருந்து கண்டுபிடிப்பு
[ வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011, 06:55.10 மு.ப GMT ]
ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகரிப்பதால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்களை குறைத்து கொள்ளும்படி வலியுறுத்துகின்றனர். இருந்தும் ரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை கட்டுப்படுத்த ஸ்டேடின்ஸ் என்ற ஊசி மருந்தை சிலர் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மருந்தை இங்கிலாந்தில் மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இது சரிவர செயல்படவில்லை. மேலும் சில பக்க விளைவுகளை எற்படுத்துவதாக கருதி அவற்றை பயன்படுத்துவதை நிறுத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து தற்போது புதிய ஊசி மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு மேஜிக் புல்லட் ஜேப் என பெயரிட்டுள்ளனர்.
இந்த ஊசி மருந்து ரத்தத்தில் கெடுதல் விளைவிக்கும் கொழுப்பு சத்தை குறைத்து நலமான வாழ்வுக்கு வழி வகுக்கிறது. இந்த மருந்தை மனிதர்களிடம் பயன்படுத்துவது குறித்து முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டது.
இதற்கான ஆய்வு 18 வயது முதல் 45 வயது வரையிலான 54 ஆண்கள் மற்றும் 2 பெண்களிடம் நடத்தப்பட்டது. அதில் நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த சிகிச்சை ஏ.எம்.ஜி145 என பெயரிடப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Geen opmerkingen:

Een reactie posten