தொலைக்காட்சி

zaterdag 19 november 2011

டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல்: டிராவிட் முதலிடம்

டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல்: டிராவிட் முதலிடம்
[ வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011, 04:02.00 பி.ப GMT ]
சர்வதேச கிரிக்கட்டில் இந்த ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் மற்றும் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்திய வீரர் டிராவிட் 10 டெஸ்ட் போட்டிகளில்(19 இன்னிங்ஸ்கள்) விளையாடி 952 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார். இதில் 5 சதம், 2 அரை சதம் அடங்கும்
.
இவருக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்தின் இயான்பெல் 8 போட்டிகளில்(11 இன்னிங்ஸ்கள்) விளையாடி 950 ரன்கள் குவித்து 2வது இடம் பிடித்துள்ளார். இதில் 5 சதம், 2 அரை சதம் அடங்கும்.
மூன்றாவது இடத்தை இங்கிலாந்தின் அலாஸ்டயர் குக் பிடித்துள்ளார். இவர் 8 போட்டிகளில்(11 இன்னிங்ஸ்கள்) விளையாடி 4 சதம், 2 அரை சதங்களுடன் 927 ரன்கள் குவித்துள்ளார்.
அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் 6 போட்டிகளில் 41 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவின் இஷாந்த் சர்மா 2வது இடத்தில் உள்ளார். அவர் 10 போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
மேற்கிந்திய அணி வீரர் தேவேந்திர பிஷூ 9 போட்டிகளில் 36 விக்கெட் வீழ்த்தி

Geen opmerkingen:

Een reactie posten