தொலைக்காட்சி

woensdag 23 november 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு! தேநீர் விருந்துபசாரத்திலும் பங்கேற்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு! தேநீர் விருந்துபசாரத்திலும் பங்கேற்பு
[ செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011, 02:28.15 AM GMT ]
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதை பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை சமர்ப்பித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை எவ்விதமான குழப்பங்களையும் விளைவிக்காது கேட்டுக் கொண்டிருந்தமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒரு விரலைத் தூக்கியதன் பின்னர் சகலரும் எழுந்து குழப்பத்தை விளைவித்து வெளிநடப்புச் செய்துவிட்டனர். கட்சிக்குள் அவ்வாறான ஒற்றுமை இருக்கவேண்டும். அதேபோல, நாட்டினை மேம்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஆலோசனை வழங்கவேண்டும்.
வரவு செலவுத் திட்டம் சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வேளையில், ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்து சபையை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கதாகும்.
வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்ததன் பின்னர் எம்.பி.க்களுக்கான உணவகத்தில் நிதியமைச்சினால் வழங்கப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் பங்குபற்றினர்.
அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா. சம்பந்தன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச மற்றும் அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இந்த விருந்துபசாரத்திலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளவில்லை என்பதுடன் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களும் இந்த தேநீர் விருந்துபசாரத்தில் பங்கேற்கவில்லை.

Geen opmerkingen:

Een reactie posten