தொலைக்காட்சி

maandag 7 november 2011

நன்றாக தூங்குவதற்கு செர்ரி ஜூஸ் குடியுங்கள்: மருத்துவர்கள் அறிவுரை

நன்றாக தூங்குவதற்கு செர்ரி ஜூஸ் குடியுங்கள்: மருத்துவர்கள் அறிவுரை
[ ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 11:18.25 மு.ப GMT ]
சோறு, தண்ணீர் போல தூக்கமும் மிகமிக அவசியமானது. போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால் இயல்பு நிலை பாதிக்கப்படும். இந்த பாதிப்பை இன்சோம்னியா என்கிறது மருத்துவ உலகம். இந்த பாதிப்பில் இருந்து விடுபட உலகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஏராளமான பரிந்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்தின் நார்த்அம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. நன்கு தூக்கம் வருவதற்கு ஆராய்ச்சியாளர்கள் தரும் அறிவுரை இது:
கடின உழைப்புக்கு பின்பு இரவில் உறக்கம் இன்றி அவதிப்படுவது அடுத்த நாளின் இயல்பு வேலைகளை பாதிக்கும்.
இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்போது மன உளைச்சல் ஏற்பட்டு நோயாளியாக மாறும் நிலை ஏற்படும் சாத்தியங்களும் அதிகம். தூக்கமின்மை என்பது சாதாரணமாக விடக்கூடியது அல்ல. அதை உடனே சரிசெய்ய வேண்டும்.
நமது உணவு, பழக்க வழக்கங்கள் காரணமாக தூக்கம் பாதிக்கப்படலாம். இதற்கு மருந்து, மாத்திரைதான் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை.
படுக்கைக்கு செல்லும் முன்பு தினமும் ஒரு கிளாஸ் செர்ரி பழச்சாறு குடித்தால் நன்கு தூக்கம் வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. செர்ரி ஜூஸ் குடித்தவர்கள் கூடுதலாக 25 நிமிடம் தூங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Geen opmerkingen:

Een reactie posten