பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் எரிகல் |
[ புதன்கிழமை, 09 நவம்பர் 2011, 10:01.57 மு.ப GMT ] |
அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விண்வெளியில் இருந்து ராட்சத எரிகல் ஒன்று பூமியை நோக்கி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த எரிகல் 400 மீற்றர் அதாவது 1,300 அடி அகலமானது. ஒரு பெரிய விமானம் போன்றது. அதற்கு 2005 ஒய்.யூ.55 என பெயரிடப்பட்டுள்ளது.
அது 3 லட்சத்து 25 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. மெல்ல பூமியை நோக்கி வரும் அந்த எரிகல் தற்போது சந்திரனை நெருங்கி உள்ளது.
வருகிற வியாழக்கிழமை வானத்தில் உலா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அதை வெறுங் கண்களால் பார்க்க முடியும்.
மேலும் இந்த எரிகல் பூமியை தாக்காது. அதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1976ம் ஆண்டு ஒரு பெரிய எரிகல் பூமியை நோக்கி வந்தது.
அதன் பிறகு தற்போது ஒரு ராட்சத எரிகல் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த எரிகல் 2028ம் ஆண்டில் பூமியை நோக்கி |
Geen opmerkingen:
Een reactie posten