மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு |
[ புதன்கிழமை, 16 நவம்பர் 2011, 07:16.55 மு.ப GMT ] |
கணணியில் நாம் பல்வேறு வகையான மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புது வசதிகளை புகுத்தி பல்வேறு தொகுப்புகளை நிறுவனங்கள் வெளியிடுகின்றன. ஒரு சில புதிய பதிப்பு மென்பொருட்களில் வசதிகள் நிறைய இருந்தாலும் உபயோகிப்பதில் சில சிரமங்கள் ஏற்ப்படும்(திறக்க அதிக நேரம் எடுத்து கொள்ளுதல், சில வசதிகள் நீக்கி இருத்தல்). புதிய வசதிகள் பெறலாம் என்று பழைய பதிப்பை அழித்து புதிய பதிப்புகளுக்கு மாறும் பயனாளிகளுக்கு ஏமாற்றங்கள் தான் மிஞ்சும். பழைய பதிப்பில் இருந்த ஏதாவது பயனுள்ள வசதி இதில் இருக்காது. இது போன்ற நேரத்தில் பயனாளர்கள் பழைய பதிப்பு இருந்தாலே நல்லது என நினைப்பர். பழைய பதிப்பு மென்பொருட்களை தரவிறக்கம் செய்யும் வசதியை பல்வேறு இணையதளங்கள் அளிக்கின்றன. 1. OldVersion: பழைய பதிப்பு மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய மிகச்சிறந்த தளமாகும். இந்த தளத்தில் மென்பொருட்கள் பல பிரிவுகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. தேவையான மென்பொருளை சுலபமாக தேடி பெற்று கொள்ளும் வசதியும் கொடுத்துள்ளனர். தினம் தினம் பல்வேறு பழைய பதிப்பு மென்பொருட்களை இந்த தளத்தில் சேர்த்து கொண்டே உள்ளனர். http://www.oldversion.com/ 2. OldApps: இந்த தளமும் மிகச்சிறந்த தளமாகும். இந்த தளத்தில் MAC, WINDOWS என இரண்டு இயங்கு தளங்களுக்கும் பழைய பதிப்பு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்திலும் மென்பொருட்கள் பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. http://www.oldapps.com/ |
தொலைக்காட்சி
vrijdag 18 november 2011
மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten