மூக்கு என்ற உறுப்பை நம்மில் பலர் கவனிப்பதே இல்லை, அதாவது அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அதையும் கவனிக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதே இல்லை. மூக்கானது வாடை பிடிக்க மட்டும் அல்லாது நோயை அறியவும் உதவுகிறது என்றால் வியப்பாக இல்லை, ஒருவருக்கு தன்னுடைய வாழ்நாளில் நடந்த எல்லாவற்றையும் மறக்கடிக்கும் நினைவிழத்தல் நோயை முன்கூட்டியே கண்டுபிடிக்க உதவுகிறது.
ஜேர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பேராசிரியர் போரிஸ் ஷிமிட் தலைமையில் அல்சைமர் என்று அழைக்கப்படும் நினைவிழத்தல் நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மூளை செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நோயின் ஒரு அடையாளமாக, மூளையில் படிந்துவிடும் தோவு என்ற நச்சுப் புரதத்தை அவர்கள் அடையாளம் கண்டார்கள். நோய் முற்றிய நிலையில் மூளையில் காணப்படும் இந்தப் புரதம், நோயின் ஆரம்ப காலத்தில் மூக்குக்குள் இருக்கும் சளிச் சவ்வில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது.
ஆரம்ப நிலையிலேயே இதைக் கண்டுபிடித்துவிட்டால் மருத்துவ சிகிச்சை மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தி |
Geen opmerkingen:
Een reactie posten