தொலைக்காட்சி

zaterdag 19 november 2011

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை
[ சனிக்கிழமை, 19 நவம்பர் 2011, 07:23.34 AM GMT +05:30 ]
முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஒரே மகளான இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
முன்னாள் பிரதமர் இந்திராவின் 94வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது நாட்டில் சீக்கிய தீவிரவாதம் அதிகரித்து வந்தது.
இதையடுத்து சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக இந்திரா காந்தி அனுமதி வழங்கினார்.
இவ்வாறு தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக இடம்பெற்ற நடவடிக்கைகளால் இந்திரா காந்தி சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாகினார்.
இதன் தொடர்ச்சியாக ஒக்டோபர் 31, 1984 இல் சீக்கியர்களான அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten