தொலைக்காட்சி

zondag 13 november 2011

கிரிக்கட் வீரர் அஸ்வின் திருமணம் வெகுசிறப்பாக நடந்தேறியது

கிரிக்கட் வீரர் அஸ்வின் திருமணம் வெகுசிறப்பாக நடந்தேறியது
[ ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011, 06:47.29 மு.ப GMT ]
இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தன் பள்ளித்தோழி ப்ரீத்தியை இன்று திருமணம் செய்து கொண்டார்.
இவர் டெல்லியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அறிமுகப் போட்டியிலேயே 9 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார் அஸ்வின். இந்நிலையில் இன்று காலை அஸ்வின் திருமணம் சென்னையில் நடந்தது.
தனது பள்ளித் தோழியான ப்ரீத்தியை அவர் திருமணம் செய்து கொண்டார். இத்திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.
நாளை கொல்கத்தாவில் துவங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடவுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten