தொலைக்காட்சி

dinsdag 15 november 2011

பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புளுகுணாவ குளம் இன்று திறந்து வைக்கப்பட்டது.



பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புளுகுணாவ குளம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
[ செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011, 04:53.16 PM GMT ]
யுத்த சூழ்நிலையின் போது அழிவடைந்து, ஜப்பான் அரசாங்கத்தின் சமாதான செயற்றிட்டத்தின் கீழ் 40 கோடி ரூபா செலவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புளுகுணாவ குளத்தின் திறப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.
இதன் காரணமாக பட்டிப்பளை பிரதேசத்தில் 4,300 ஏக்கர் பெரும்போக செய்கையில் ஈடுபட்டு வந்தவர்கள் தற்போது 5000 ஏக்கர்கள் செய்கை பண்ணமுடியும் என பட்டிருப்பு நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் பா.தணிகாசன் தெரிவித்தார்.
அத்துடன் இதுவரையில் 1000 ஏக்கர் விவசாயத்தில் ஈடுபட்டுவந்த சிறுபோக செய்கையாளர்கள் 2200 ஏக்கர் செய்யமுடியும் எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ச, ஜப்பானியத் தூதுவர் நொபு ஹிடோ ஹோபா , கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரததி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் குளம் திருத்தியமைக்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தின் முக்கிய குளங்களான கங்காணியார்குளம், கடுக்காமுனை வில்லுக்குளம் என பல குளங்களுக்கு நீர் கிடைப்பதற்கு வசதி ஏற்பட்டுள்ளதுடன் பெருமளவான விவசாய நிலங்களுக்கும் நீர் விநியோகிப்பதற்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten