தொலைக்காட்சி

maandag 7 november 2011

மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய கையடக்க தொலைபேசிகள்

மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய கையடக்க தொலைபேசிகள்
[ சனிக்கிழமை, 05 நவம்பர் 2011, 12:46.48 மு.ப GMT ]
வோசெஸ்ரரின் பொலிரெக்னிக் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கையடக்கத் தொலைபேசியை இதயத்துடிப்பை கண்டறியும் கருவி (stetheoscope) மற்றும் நுண்ணறிவு கருவியாக (microscope) மாற்றமுடியுமெனக் கூறியுள்ளனர். ஒரு மோட்டரோலா அன்றொய்ட் கைத்தொலைபேசியின் கமெராவில் நோயாளியொருவரின் விரலை அழுத்தும்போது அவை குருதியிலுள்ள ஓக்சிசன் அளவு, சுவாசத்துடிப்புகள் உட்பட குருதியோட்டத் தகவல்கள் ஆகியவற்றினை வைத்தியசாலையில் பயன்படுத்தப்படும் பாரிய, பெறுமதிப்பு மிக்க திரைகளில் பதிப்பது போன்று துல்லியமாகப் பதிந்து காட்டின.
வேறுசில ஆய்வாளர்கள் iPhone ஐ ஒரு நுண்ணறி கருவியாக பயன்படுத்தி செய்துகாட்டினர். இதனுடன் பசியுடன் இருக்கும் நபரை பரிசோதிக்கும் ஒரு மென்பொருளும் இருந்தது. மோட்டரோலா அன்றொய்ட் கைத்தொலைபேசி கமராவின் மீது ஒரு ball lense வைத்துப் பதியும்போது அது ஒரு மருத்துவ நுண்ணறிகருவி வேலைசெய்வது போல பிம்பங்களைப் பெறிதாக காட்டியது.
மேலும் அதில் குருதிக்கலங்களின் வேறுபாட்டையும் காணக்கூடியதாயிருந்தது. வைத்தியர்கள் பயணிக்கும் போது எடுத்துச்செல்ல பயனுள்ளதாக இது அமைகின்றது. இந்த வசதியினை ஒரு நோயாளியின் சுயபரிசோதனைக்கு மற்றும் சிறிதளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள பயன்படுத்தலாம் என் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten